ஏப்ரல் 19: அசத்தலான மோட்டோ ஜி6 பிளே அறிமுகம் (அம்சங்கள்).!
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் ஏப்ரல் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டோ ஜி6 பிளே பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

மேலும் மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் முதற்கட்டமாக பிரேசில் நகரில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.
மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் 1440x720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல்-சிம், கைரேகை சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் சாதனங்கள் இரட்டை கேமரா லென்ஸ் கொண்டுள்ளது, ஆனால் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் மட்டும் ஒற்றை கேமரா அடிப்படையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications