மோட்டோ ஜி6 சாதனத்திற்கு நம்பமுடியாத விலைகுறைப்பு : வாய்ப்பை பயன்படுத்துங்கள் மக்களே.!
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3000 நிரந்தர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது தற்சமயம் ரூ.3000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்.

மோட்டோ ஜி6
மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 450 செயலி
மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மெமரி
இந்த ஸ்மார்ட்போன் 3 ரேம்/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/ 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா
இந்த மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications