டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான மோட்டோ ஜி6 பிளஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் மோட்டோ வலைதளங்களில் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான மோட்டோ ஜி6 பிளஸ் அறிமுகம்.!

பேடிஎம் மற்றம் ஜியோ போன்ற நிறுவனங்கள் சிறப்பு கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி6 பிளஸ் :

மோட்டோ ஜி6 பிளஸ் :

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2160 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு வைஃபை, ப்ளூடூத்,யுஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆரவுகள் இவற்றுள் அடக்கம்.

 விலை:

விலை:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை
ரூ.22,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G6 Plus With 6GB RAM, Dual Rear Cameras Launched in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X