5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ ஜி6 பிளஸ்.!
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோ ஜி சீரிஸ் மற்றும் மோட்டோ இசீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் ஏற்கனவே மோட்டோ ஜி6, ஜி6 பிளஸ், ஜி6 பிளே போன்ற ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. தற்சமயம் இணையத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ ஜி6 பிளஸ் சாதனத்திற்கு தைவான் நாட்டில் என்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி6 பிளஸ் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மோட்டோ ஜி6 பிளஸ் பொறுத்தவரை 'எக்ஸ்டி1926-5" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவி 5.93-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவி வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3250எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications