செப்டம்பர் 10: மிரட்டலான மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை?
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 10-ம் தேதி மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், ஃபேஸ் அன்லாக்,லேன்ட்மார்க் அங்கீகாரம், மேக்ஸ் விஷன் டிஸ்பிளே, டர்போ பவர் சார்ஜிங் போன்ற அட்டகாசமான அம்சங்களை
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 636:
இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மேலும் டூயல் சிம் ஆதரவு பின்பு செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்ட கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

கேமரா:
மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு
8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், ஆட்டோஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை
சென்சார், பி2ஐ வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி மற்றும் வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இதனுள் இடம்பெற்றுள்ளது.

விலை:
மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப
விலை ரூ.24,350-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications