5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் கலக்கும் மோட்டோ ஜி6 பிளஸ்.!

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தற்சமயம் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய குறிப்புகள் மற்றும் அம்சங்களை விவரிக்கும் வகையில் அதன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் வீடீயோ கேமிங்-வசதிக்கு தகுந்தபடி மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பார்சிலோனாவில் நடக்கும் MWC 2018 நிகழ்வில் மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மார்ச் 1-வரை நடக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் உறுதியாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் அம்சங்களுடன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்த ஸ்மார்ட்போன் மாடல்
உருவாக்கியுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் அம்சங்களுடன் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியுடன் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 18: 9 விகிதம்:

18: 9 விகிதம்:

இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 5.93-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2160×1080 தீர்மானம்
கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
டூயல் கேமரா:

டூயல் கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3200எம்ஏஎச்:

3200எம்ஏஎச்:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.21,115-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto G6 Plus prototype unit first live pictures leaked online ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X