Home
Mobile

வெறும் ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 பிளே.!

அதனை உறுதி செய்யும் வண்ணம், மோட்டோ ஜி6 ப்ளே ஸ்மார்ட்போன் பற்றிய விரிவான அம்சங்கள், நம்புடியாத விலை நிர்ணயம் மற்றும் வடிவமைப்பு சார்ந்த ஒரு கொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

By Muthuraj

நீண்டகாலமாகவே, மலிவான விலை நிர்ணயம் கொண்ட (மிட்-ரேன்ஜ்) ஜி-தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிட மோட்டோரோலா பணியாற்றி வருவதாக பல வதந்திகள் பரவி வருகின்றன. அதனை உறுதி செய்யும் வண்ணம், மோட்டோ ஜி6 ப்ளே ஸ்மார்ட்போன் பற்றிய விரிவான அம்சங்கள், நம்புடியாத விலை நிர்ணயம் மற்றும் வடிவமைப்பு சார்ந்த ஒரு கொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

வெறும் ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 பிளே.!

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் மூலம் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் "இன்-ஹவுஸ் மோட்டோரோலா டாக்குமென்டரீஸ்"வழியாக வெளிவந்துள்ளன. வெளியான தகவலின்படி, கூறப்படும் மோட்டோ ஜி 6 பிளே ஆனது, 18: 9 என்கிற திரை விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட ஒரு 5.7 இன்ச் எச்டி+ (720 × 1440 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

அட்ரெனோ 308 ஜிபியூ உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 427 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி6 பிளே ஆனது அதன் பின்புறத்தில் ஒரு 13 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறும். அது பாஸ்ட் கேமரா, பெஸ்ட் ஷாட், மேனுவல் மோட் மற்றும் ஒரு பியூட்டி மோட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

வெறும் ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 பிளே.!

முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. வெளியான தகவல் உண்மையெனில் மோட்டோ ஜி6 பிளே ஆனது மோட்டோரோலாவின் டர்போபவர் சார்ஜ் தொழில்நுட்பத்துடனான 4,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். அறிக்கையின்படி, மோட்டோ ஜி6 ப்ளே ஆனது எப்எம் ரேடியோ அணுகல், டால்பி ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு, மோட்டோ கீ ஆதரவு கொண்ட ஒரு கைரேகை சென்சார், மற்றும் சில பிரத்யேக மோட்டோ மென்பொருள் திறன்களை கொண்டிருக்கும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, மோட்டோ ஜி6 ப்ளே ஆனது ரூ.13,000/- என்கிற புள்ளியையும், மோட்டோ ஜி6 ஆனது ரூ.16,300/- என்கிற புள்ளியையும் எட்டலாம்.

Best Mobiles in India

English summary
Moto G6 Play with 4,000mAh battery, Snapdragon 427 SoC leaked. Read more about this in Tamil GizBo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X