ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் வெளிவரும் மோட்டோ ஜி6 பிளே.!
இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கம் நோட்டிஃபிகேஷன் எல்இடி, சென்சார்கள், செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு மோட்டோரோலாவின் பிளே சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிகம் வெளியிடப்படவில்லை, அதைத் தொடர்ந்து பிளே சீரிஸ் போன்களுக்கு மாற்றாக புதிய எஸ் சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் மீண்டும் பிளே சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்திருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் விரைவில் மோட்டோ ஜி6 பிளே என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. இக்கருவியில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. ஹோம் பட்டன் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: @OnLeaks x @CompareRaja

மோட்டோ ஜி6 பிளே :
மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440x720 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இயர்பீஸ்:
இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கம் நோட்டிஃபிகேஷன் எல்இடி, சென்சார்கள், செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. மேலும் கேமராவின் கீழ் மோட்டோரோலா லோகோ மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


4000எம்ஏஎச்:
மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications