மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 வெளியீட்டு தேதியை அறிவத்துள்ளது மோட்டோரோலா நிறுவனம், அதன்படி வரும் ஏப்ரல்
19-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியிட்ப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ சார்பில் வெளியிடப்பட்ட செயலிக்கு தற்சமயம் அப்டேட்ட செய்யப்பட்டுள்ளது, எனவே போட்டோ, வீடியோ உள்ளிட்ட அனைத்தும் எளிமையாக தேர்வு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோட்டோவின் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும். மேலும்
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக கொரில்லா கண்ணாடி 3
பாதுகாப்பு அம்சம் மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி அடக்கத்தை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6 சாதனம்.
மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி
பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் எச்டிஆர் மோட் இடம்பெற்ள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், கைரேகை சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications