Home
Mobile

மோட்டோ ஜி6, ஜி6 பிளஸ், ஜி6 பிளே : அம்சங்கள் கசிந்தது.!

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும்.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6, ஜி6 பிளஸ், ஜி 6 பிளே ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன்:

ஸ்னாப்டிராகன்:

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மோட்டோ ஜி6 பிளஸ், ஜி6 பிளே முறையே ஸ்னாப்டிராகன் 630 மற்றும் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும்.

மோட்டோ ஜி6 பிளஸ்:

மோட்டோ ஜி6 பிளஸ்:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நிறங்கள்:

நிறங்கள்:

மோட்டோ ஜி 6 பிளஸ் விலை 330 டாலர்கள் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கருப்பு, சாம்பல், வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி6 பிளஸ் கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா
16மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்சல் :

பிக்சல் :

மோட்டோ ஜி6, ஜி6 பிளஸ், ஜி 6 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களில் 18:9 எனற திரைவிகிதம் மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G6 G6 Plus G6 Play specs leaked; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X