மோட்டோ ஜி6, ஜி6 ப்ளஸ், ஜி6 ப்ளே மொபைல் எப்படி? விரிவான அலசல்.!

2018ல் ட்ரெண்டாக இருக்கும் சில அம்சங்களையும் லெனோவா சேர்த்துள்ளது. 18:9 உயர திரை, கண்ணாடியாலான பின்பகுதி என 2018 ல் பட்டையை கிளப்பப்போகிறது மோட்டோ ஜி6 தொடர்.

|

கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலாவின் பயணம் அவ்வளவு மென்மையானதாக இருக்கவில்லை. லாப குழப்பங்கள், உரிமையாளர் மாற்றங்கள், பிராண்டிங் யுத்திகளில் மாற்றம் என பலவற்றிற்கு மத்தியில் மோட்டோ ஜி குடும்பம் மட்டும் தப்பிப் பிழைத்துள்ளது. இந்த சீரான போக்கிற்கு, உயர் தர அம்சங்கள் மற்றும் குறைந்த விலை என்ற யுத்தியை கையாண்டுள்ளது மோட்டோ.

மோட்டோ ஜி6, ஜி6 ப்ளஸ், ஜி6 ப்ளே மொபைல் எப்படி? விரிவான அலசல்.!

வளர்ந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில் அதை சமாளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். மோட்டோ ஜி6 மிகவும் தைரியமாக அதில் களமிறங்கியிருக்கிறது. மோட்டோவின் சிறப்பம்சங்களால்,அதன் மீதான ரசிகர்களின் அன்பானது மாறாமல் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. பிங்கர் பிரிண்ட் ரீடர், டூயல் கேமரா, தூயாமையான ஆண்ட்ராய்டு அனுபவம் ஆகியவை அவற்றுள் சில. 2018ல் ட்ரெண்டாக இருக்கும் சில அம்சங்களையும் லெனோவா சேர்த்துள்ளது. 18:9 உயர திரை, கண்ணாடியாலான பின்பகுதி என 2018 ல் பட்டையை கிளப்பப்போகிறது மோட்டோ ஜி6 தொடர்.
மோட்டோ ஜி6, ஜி6 ப்ளஸ், ஜி6 ப்ளே மொபைல் எப்படி? விரிவான அலசல்.!

மோட்டோ ஜி6 - சிறப்பம்சங்கள்
கொரில்லா க்ளாஸ் 3 யினாலான பின்பகுதி,153.8x72.3x8.3 மில்லிமீட்டர் அளவில், 167 கிராம் எடையில், p2i தண்ணீர் எதிர்ப்புதிறன் கொண்ட நானோ கோட்டிங் உள்ள மொபைல் இது. 5.7 இன்ச், 18:9 FHD+ 2160x1080, IPS LCD, MAX விஷன்; கொரில்லா க்ளாஸ் திரை கொண்டது.

பின்புறம் உள்ள இரு கேமராவில், முக்கிய கேமரா 12MP, f/1.8 லென்ஸ்,இரண்டாம் கேமரா 5MP, 1080p@60fps வீடியோ ரெக்கார்டிங் வசதியும்,

முன்புற கேமராவில் 8MP, 1080p@30fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எல்.ஈ.டி செல்பி ப்ஃளேஸ் வசதியும் உளளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 450, ஆக்டா கோர் கார்டெக்ஸ் -A53 1.8GHz இயக்கியும்,

3/4GB ரேம், 32/64GB உள்ளார்ந்த சேமிப்புதிறன், 128GB வரை விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்.டி கார்டு வசதியும் உள்ளது. ஆண்ராய்டு

8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இதில்

3,000mAh டார்போ சார்ஜ் வசதியுள்ள பேட்டரி உள்ளது. இது போக ஹோம் பட்டனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும், டைப் சி யூ.எஸ்.பி போர்ட், டூயல் சிம் வசதியும் உள்ளது.

மோட்டோ ஜி6, ஜி6 ப்ளஸ், ஜி6 ப்ளே மொபைல் எப்படி? விரிவான அலசல்.!

மோட்டோ ஜி6 ப்ளஸ்- சிறப்பம்சங்கள்

கொரில்லா க்ளாஸ் 3 யினாலான பின்பகுதி,160x75.5x8 மில்லிமீட்டர் அளவில், 167 கிராம் எடையில், p2i தண்ணீர் எதிர்ப்புதிறன் கொண்ட நானோ கோட்டிங் உள்ள மொபைல் இது. 5.9 இன்ச், 18:9 FHD+ 2160x1080, IPS LCD, MAX விஷன்; கொரில்லா க்ளாஸ் திரை கொண்டது.

பின்புறம் உள்ள இரு கேமராவில், முக்கிய கேமரா 12MP, 1.4um, f/1.7 லென்ஸ்,இரண்டாம் கேமரா 5MP 4k@30fps வீடியோ ரெக்கார்டிங் வசதியும்,

முன்புற கேமராவில் 8MP, 1080p@30fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எல்.ஈ.டி செல்பி ப்ஃளேஸ் வசதியும் உளளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டா கோர் கார்டெக்ஸ் -A53 2.2GHz இயக்கியும்,

4/6GB ரேம், 128GB வரை உள்ளார்ந்த சேமிப்புதிறன், 128GB வரை விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்.டி கார்டு வசதியும் உள்ளது. ஆண்ராய்டு

8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இதில்

3,200mAh டார்போ சார்ஜ் வசதியுள்ள பேட்டரி உள்ளது. இது போக ஹோம் பட்டனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும், டைப் சி யூ.எஸ்.பி போர்ட், டூயல் சிம் வசதியும் உள்ளது.

மோட்டோ ஜி6, ஜி6 ப்ளஸ், ஜி6 ப்ளே மொபைல் எப்படி? விரிவான அலசல்.!

மோட்டோ ஜி6 ப்ளே- சிறப்பம்சங்கள்

பிளாஸ்டிக்காலான பின்பகுதி,154.4x72.2x9 மில்லிமீட்டர் அளவில், 175 கிராம் எடையில், p2i தண்ணீர் எதிர்ப்புதிறன் கொண்ட நானோ கோட்டிங் உள்ள மொபைல் இது. 5.7 இன்ச், 18:9 HD+ IPS LCD, MAX விஷன் திரையை கொண்டது.

பின்புறம் உள்ள இரு கேமராவில், முக்கிய கேமரா 13MP, f/2.0 லென்ஸ்,இரண்டாம் கேமரா 5MPஎல்.ஈ.டி 1080p@30fps வீடியோ ரெக்கார்டிங் வசதியும்,

முன்புற கேமராவில் 8MP, 1080p@30fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எல்.ஈ.டி செல்பி ப்ஃளேஸ் வசதியும் உளளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா கோர் கார்டெக்ஸ் -A53 1.4GHz இயக்கியும்,

3/4GB ரேம், 32/64GB உள்ளார்ந்த சேமிப்புதிறன், 128GB வரை விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்.டி கார்டு வசதியும் உள்ளது. ஆண்ராய்டு

8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும் இதில்

40000mAh டார்போ சார்ஜ் வசதியுள்ள பேட்டரி உள்ளது. இது போக ஹோம் பட்டனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும்,ப்ளூடூத்4.2, டூயல் சிம் வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G6 G6 Plus and G6 Play hands on review; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X