அழகிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் ஆன்ட்ராய் UI செயலியுடன் புத்தம் புது ஸ்மார்ட் ஜோடி!

  மோட்ரோலா நிறுவனம், ஆறாம் தலைமுறை ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Moto G6 மற்றும் Moto G6 Play என்னும் இரண்டு வகையான ஸ்மார்ட் போன்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. மோட்ரோலா நிறுவனம் 2013 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதனுடைய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் செயல்பாட்டினால் பயனாளர்களின் உள்ளம் கவர்ந்த நிறுவனமாக மாறியது. பட்ஜெட் விலையில் வாங்குவதற்கு ஏற்ற செயல்திறன் மிகுந்த போனாக அது விளங்கியது.

  தற்போது அறிமுகமாகியுள்ள மோட்டோ ஸ்மார்ட் போன்களும் மேம்பட்ட செயல்திறனுடன் வாங்குவதற்கு ஏற்ற விலையில் உள்ளன. பெரிய திரை, கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, வேகமான செயல்பாட்டுக்கான ஸ்டாக் ஆன்ட்ராய்டு என MotoG பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்கிறது. அமேசான் வணிகத் தளத்தில் Moto G6 ஸ்மார்ட் போன் விலை ரூ.13,999. ஃபிளிப்கார்ட் வணிகத்தளத்தில் Moto G Play ஸ்மார்ட் போன் விலை 11,999 ரூபாய்.

  புதிதாகச் சந்தைக்கு வந்துள்ள Moto G6 வகையிலான போன்கள் எவ்வகையில் சிறப்புப் பெற்றவை என்பதைப் பார்ப்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  வடிவமைப்பு

  Moto G வகையிலான ஸ்மார்ட் போன்களிலேயே மிகச் சிறந்த வடிவமைப்புடன் வந்துள்ள போன்களாக Moto G6 வகை போன்கள் உள்ளன. இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட Moto X4 போன்களைப் போன்ற வடிவமைப்பை Moto G6 வகை போன்களும் பெற்றுள்ளன.

  மெதுவாக அசைத்தாலே ஒளியைப் பிரதிபலிக்கும் வகையிலான முப்பரிமாண கண்ணாடி போன்ற பொருளால் ஆன பின்புற பேனல். முன்புறம் பாதுகாப்பு மிகுந்து கொரில்லா கண்ணாடியால் ஆனது. Moto G6 மற்றும் G6 Play ஆகிய இரண்டு போன்களுமே சற்று வளைவான வட்ட வடிவ முனைகளைக் கொண்டுள்ளன. இதற்கு முன்னர் வெளிவந்த மோட்டோ போன்களைக் காட்டிலும் சிறந்த வடிவமைப்பைப் புதிய போன்கள் பெற்றுள்ளன. ஒரு கையால் பிடித்துப் பயன்படுத்துவதற்கு ஏற்பக் கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. திரையின் அடிப்பகுதியில் விரல் கைப் பதிவு ஸ்கேனர் உள்ளது. தேய்ப்பதன் மூலமாகவும் தட்டுவதன் மூலமாகவும் திரையில் தேவையானவற்றைத் தேடிக் கொள்ளலாம்.

  கடிகார முகப்பைப் போல இரண்டு சிறிய வட்டவடிவ பின்புறக் கேமராவுக்கான அமைப்பு கண்கவரும் வகையில் உள்ளது. 15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இது போன்றதொரு வடிவமைப்புடன் ஸ்மார்ட் போன் அமைவது மகிழ்ச்சிக்குரியது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், மோட்டோ போன்களின் பழைய வடிவமைப்புகளை ஒத்திருந்தாலும் சில புதிய அம்சங்களோடு வந்துள்ள Moto G6 மற்றும் G6 Play ஆகிய போன்களின் வடிவமைப்பு வாடிக்கையாளர்களை ஏமாற்றவில்லை என்று சொல்லலாம்.

  திரைப்பகுதி

  Moto G6 மற்றும் G6 Play ஆகிய இரண்டு போன்களுமே உயரமான திரைகளைக் கொண்டுள்ளன. 5.7 அங்குல உயரத்துடன் Full HD+ Max Vision IPS திரையுடன் Moto G6 போன் வெளிவந்திருக்கிறது. Moto G6 Play போனுடைய திரையும் 5.7 அங்குலம் உயரமுடையது. ஆனால், அதனுடைய ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள் என்பது சற்று வருத்தம்தான். IPS முறையிலான திரை பளிச்செனத் தெளிவாகக் காட்சிகளைக் காண்பிக்கிறது. நேரடியான சூரிய ஒளியில் இத் திரை எப்படிப்பட்ட தன்மையில் உள்ளது என்பதை இனிமேல்தான் சோதித்தறிய வேண்டும். படித்தல், யூடியூப் மற்றும் வீடியோக்களைப் பார்த்தல், இணையத் தேடல் போன்றவற்றுக்கு ஏற்ற திரைப்பகுதியை Moto G6 Play மற்றும் Moto G6 ஆகிய போன்கள் கொண்டுள்ளன.

  ஹார்டுவேர் மற்றும் செயலிகள்

  Snapdragon செயலியைக் கொண்ட மையச் செயல்பாட்டுப் பகுதியை (CPU) இந்தப் புதிய வகை போன்கள் கொண்டுள்ளன. இப்பகுதி 3GB RAM மற்றும் 32GB அளவிலான உள்ளார்ந்த சேமிப்பக வசதியைக் கொண்டுள்ளது. இதனை நுண் சேமிப்பக அட்டைகள் மூலமாக 125 GB அளவுக்கு விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஸ்டாக் ஆன்ட்ராய்டு பயனாளர் இடைமுக மென்பொருள் பயன்பாடுதான் Moto G போன்களின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இந்த போன்கள் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ செயலி மூலம் இயக்கப்படுகிறது. அன்றாடப் பயன்பாடுகளை எளிமைப் படுத்தும் வகையில் உடலியக்கச் செயல்பாடுகள் மூலம் போன் இயங்கும் வகையில் உள்ளது. போனைக் கையில் வைத்துக் கொண்டு மணிக்கட்டை அசைப்பதன் மூலம் கேமராவைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும். போனை வைத்துக் கொண்டு வெட்டுவது போல சைகை செய்தால் ஃப்ளாஷ் லைட் எரியும். மூன்று விரல்களை வைத்துத் தேய்ப்பதன் மூலமாக விரைவாக ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கலாம். இவை போன்ற அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற செயல்பாடுகளையும் சிறப்பு அம்சங்களையும் இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது. இவற்றை பயன்படுத்தும் பொழுதுதான் இதனுடைய நிறை குறைகளைத் துல்லியமாக அறிய முடியும்.

  கேமரா :

  Moto G6 போனில் பொருத்தப்பட்டுள்ள இரட்டை லென்சுகள் கொண்ட பின் பக்க கேமரா 12MP + 5 MP சென்சார்களைக் கொண்டது. Moto G6 Play போனில் 13MP சென்சார் கொண்ட ஒற்றை லென்ஸ் கேமரா உள்ளது. Moto G6 போனில் பொருத்தப்பட்டுள்ள செல்ஃபிக்கான முன் பக்கக் கேமரா 16 MP திறன் கொண்டது. Moto G6 Play கேமரா 8 MP கொண்ட முன் பக்கக் கேமராவைக் கொண்டது. Moto G6 போனில் உள்ள 16 MP திறன் கொண்ட முன்பக்கக் கேமரா மல்டி பிக்சல் தொழில் நுட்பத்துடன் இயங்கக் கூடியது குறைவான ஒளி நிலையிலும் பளிச்சென படங்களை எடுத்துத் தள்ளும். Moto G6 போனில் உள்ள கேமரா வரும் மாதங்களில் கூகுள் லென்ஸ் தொழில் நுட்பத்துக்கு மாறவிருக்கிறது. பொருள்களை நோக்கிக் கேமராவைத் திருப்பினால் அப்பொருள் பற்றிய விவரங்களைத் தருவதுதான் கூகுள் லென்சின் சிறப்பாகும்.

  பேட்டரி மற்றும் தொடர்பு சாதனங்கள்

  Moto G6 போன் 3000 mAh திறன் கொண்ட பேட்டரியால் இயங்குகிறது. Moto G6 Play போன் 4,000 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியால் இயங்குகிறது. இந்தப் போன்களை சார்ஜ் செய்ய TurboPower சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 15 நிமிடங்களில் 6 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கக் கூடிய அளவுக்கு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டது. எல்லா ஸ்மார்ட் போன்களிலும் வழக்கமாக உள்ள 4G VoLTE, Bluetooth, Wi-Fi, dual-SIM, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகிய வசதிகள் Moto 6G போன்களிலும் உள்ளன.

  நல்லாத்தான் இருக்கு… ஆனா போட்டியும் பலமா இருக்கு..

  மோட்டோ போன்கள் இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமானவை என்றாலும், இந்நிறுவனம், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துவது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போன்களில் ஆன்ட்ராய்டு 8.0 செயலி பயன்படுத்தப்படுவது மற்றும் பயனர் இடைமுக (UI) நுட்பம் கொண்டியங்குவது ஆகியவை சிறப்புக்குரியன. மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றபடி வழக்கமான ஸ்மார்ட் போன்களுக்கு உரிய அம்சங்களைத்தான் இப்போன்கள் கொண்டுள்ளன. விரிவான பயன்பாட்டுக்கு வரும்பொழுதுதான் இதனுடைய முழுமையான நிறை குறைகளை அறிய இயலும். மேட்டோ 6G போன்கள், Xiaomi நிறுவனத்தின் Redmi Note 5 மற்றும் Asus நிறுவனத்தின் ZenFone Max Pro M1 ஆகிய ஸ்மார்ட் போன்களோடு கடுமையான போட்டி போட வேண்டிய நிலையில் உள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Moto G6 and G6 Play First Impressions Premium design, updated camera and the stock Android UI: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more