மோட்டோ ஜி5பிளஸ் : வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள்.!
குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.
மோட்டோரோலா நிறுவனம் தற்சமயம் மோட்டோ ஜி5பிளஸ் என்ற ஸ்மார்ட்போன்மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி வரும் ஜூலை 25 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் டூயல் கேமரா வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எதிர்பார்த்தபடி சிறந்த மென்பொருள் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது, அதற்க்கு தகுந்தபடி குறிப்பிட்ட விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் 13மெகாபிக்சல் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது. மேலும் 1080பிக்சல் இதனுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 625:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இந்தஸ்மார்ட்போன் இயங்குகிறது.

4 ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உள்ளடக்கம் எனக் கூறப்படுகிறது, அதன்பின் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டால்பி அட்மோஸ் ஆடியோ:
மோட்டோ ஜி5பிளஸ் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர், எல்இடி ஃப்ளாஷ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவுடன் வெளிவருகிறது. மேலும் இதன் செல்பீ கேமரா பொறுத்தவரை மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications