மோட்டோ ஜி5 எஸ்+ மற்றும் எக்ஸ் 4 : என்ன விலை.? என்னென்ன அம்சங்கள்.?
ஜூன் 21-ஆம் தேதி பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்வில் மோட்டோ ஜி 5 மற்றும் மோட்டோ ஜி5எஸ்+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத இறுதியில் பல நிகழ்வுகளை வைத்திருக்கும் மோட்டோரோலா நிறுவனம் அதன் பல புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் வரும் ஜூன் 21-ஆம் தேதி பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்விற்கு இந்த மாதத்திற்கு முன்னர் அழைப்பு விடுக்கத் தொடங்கியது, அந்த நிகழ்வில் மோட்டோ ஜி 5 மற்றும் மோட்டோ ஜி5எஸ்+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21 நிகழ்விற்கு முன்னர் இன்னும் நாட்களே இருக்கும் நிலைப்பாட்டில் பிரபல டிப்ஸ்டர் ஆன ஆண்ட்ரி யாத்திம் கடந்த வியாழன் அன்று ட்விட்டர் பதிவின் மூலம் வரவிருக்கும் மோட்டோ கருவிகள் சார்ந்த சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன்படி மோட்டோரோலாவில் இருந்து எந்த உத்தியோகபூர்வ வார்த்தையும் கிடைக்கப்பெறாத மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ் பற்றிய தகவலை கசியவிட்டிருந்த யாத்திம் பகிர்ந்துகொண்ட தகவலானது துல்லியமானதாகத் தெரிகிறது.

5.5 அங்குல திரை
யாத்திம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மோட்டோ ஜி5எஸ் ப்ளஸ்ஆனது ஒரு 5.5 அங்குல திரை மற்றும் ஒரு முழு உலோக வடிவமைப்பை பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

3068எம்ஏஎச் பேட்டரித்திறன்
மேலும் இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 626 எஸ்ஓசி உடனான ஒரு ஆக்டா கோர் சிபியூ மற்றும் அட்ரெனோ 560 ஜிபியூ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு 3068எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ள இக்கருவி ஒரு இரட்டை கேமரா அமைப்பும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாறுபாடு
இக்கருவி சார்ந்து முன்னர் கசிந்த படங்கள், இந்த ஸ்மார்ட்போன் ஆனது தங்கம், சாம்பல் மற்றும் வெள்ளி உள்ளிட்ட மூன்று வண்ண மாறுபாடுகளை காட்டின.

பின்புற இரட்டை கேமரா
எனினும், யாத்திம் மூலம் கூறப்படும் ட்வீட் ஆனது முன்பக்கத்தில் தங்க நிறம் மற்றும் பின்புறத்தில் வெள்ளி நிறத்தை காட்டுகிறது. பின்புற இரட்டை கேமராக்களுடன் ஒரு இரட்டை-எல்இடி ப்ளாஷ் மற்றும் ஒரு பளபளப்பான மோட்டோரோலா சின்னம் ஆகியவற்றையும் காணமுடிகிறது.

விலை
இக்கருவியின் விலைக்கு வரும் போது, மோட்டோ ஜி 5எஸ்+ ஆனது ரூ18,999/- மற்றும் ரூ.19,999/- ஆகிய நிறைநயத்திற்கு இடையே விற்பனைக்கு வரலாம்.

மோட்டோ எக்ஸ் 4
மறுபக்கம் கூடுதலாக, மோட்டோ எக்ஸ் 4 பற்றிய விவரங்களும் கசிந்துள்ளது.இக்கருவி வரும் ஜூன் 30-ஆம் தேதி வெளியீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ எக்ஸ் 4 ஆனது ஜி5எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போனை விட அதிக விலை கொண்ட மாதிரியாக இருக்கும் என்று யாத்திம் கூறியுள்ளார்.

ஆக்டா-கோர் சிபியூ
மோட்டோ எக்ஸ் 4 ஆனது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மூலம் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது மற்றும் இந்த தொலைபேசி ஒரு ஆக்டா-கோர் சிபியூ மற்றும் அட்ரெனோ 512 ஜிபியூ கொண்டு செயல்படுத்தபடலாம் என்றும் கூறப்படுகிறது.

13எம்பி பின்புற கேமரா
இந்த தொலைபேசி 5.2 அங்குல திரை, மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு, ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு ஐபி68 சான்றிதழ் ஆகிய அம்சங்கள் இடம்பெறும். மேலும் வதந்திகள் மோட்டோ எக்ஸ் 4 ஆண்டு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளமைக்கப்பட்ட நினைவகம் மற்றும் ஒரு 13எம்பி பின்புற கேமரா கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications