ஆகஸ்ட் 29: இந்தியாவில் புதிய மோட்டோ ஜி5எஸ் பிளஸ் அறிமுகம்.!
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
லெனோவா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி புதிய மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது, அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது, பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்த புதிய மோட்டோ ஜி5எஸ் பிளஸ் விலைப் பொறுத்தவரை ரூ.22,700-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
இந்த மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு:
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் பிளஸ், மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது,
மேலும் 4ஜி எல்டிஇ ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ரியர் கேமரா பொறுத்தவரை 13மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக்
கூறப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications