Home
Mobile

பொளக்குது விற்பனை.. ரூ.13,999 க்கு 7000mAh பேட்டரி.. 50 எம்பி கேமரா.. 128 ஜிபி மெமரியுடன் Moto 5ஜி போன்!

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலைக்கு வெளியான மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 50 எம்பி கேமரா, 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W டர்போ சார்ஜிங் மற்றும் 128 ஜிபி மெமரி போன்ற அம்சங்களை கொடுக்கிறது. இந்த போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 16 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.13,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. ரூ.13,999 க்கு 7000mAh பேட்டரி.. 50 எம்பி கேமரா!

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள் (Moto G57 Power Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் ( Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்தமோட்டோ ஜி57 பவர் இருக்கிறது. அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கிறது.

3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 391 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) கொண்டுள்ளது. IP64 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும் இந்த மோட்டோ போனுக்கு வாட்டர் டச் (Water Touch) கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டிஐஏ 600 (Sony LYTIA 600) சென்சார், குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), பிடிஏஎப் (PDAF) கிடைக்கிறது. மேலும், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ஃபிளிக்கர் டிடெக்டர் கிடைக்கிறது.

மேலும், 6X டிஜிட்டல் ஜூமிங், ஈஐஎஸ் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஆடியோ ஜூம் போன்ற அம்சங்களை கொடுத்துள்ளது. 2K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 8 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோ ஜி57 பவர் கொண்டுள்ளது. மேலும், நைட் விஷன் மோட் (Night Vision Mode), ஆட்டோ நைட் விஷன் (Auto Night Vision) அம்சங்கள் கிடைக்கின்றன.

மேலும், ஷாட் ஆப்டிமைசேஷன் (Shot Optimization), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (High-Res Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

30W டர்போ சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொடுக்கிறது. பேண்டோன் ரெகாட்டா (PANTONE Regatta), மற்றும் பேண்டோன்-கோர்சேர் (PANTONE Corsair) மற்றும் பேண்டோன் ஃப்ளூயிடிட்டி (PANTONE Fluidity) ஆகிய மூன்று கலர்களில் இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto g57 Power With 8GB RAM 50MP Camera Discount on Flipkart Check New Price Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X