Home
Mobile

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Moto போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power) ஸ்மார்ட்போனை நாளை (நவம்பர் 24) மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள் (Moto G57 Power Specifications): ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 6s Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Moto போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1057 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 8ஜிபி வரை ரேம் மற்றும் 25ஜிபி வரை மெமரி உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

குறிப்பாக மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி எல்ஒடி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய கேமரா கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். தூசி மற்றும் ஸ்பிளாஸ் (dust and splash) எதிர்ப்பிற்காக ஐபி64 ரேட்டிங்கை (IP64 Rating) கொண்டுள்ளது இந்த போன்.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Moto போன்.. எந்த மாடல்?

மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-ச் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G57 Power with 7000mAh battery to be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X