Home
Mobile

நவ.24-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.13000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலான மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பீச்சர்களும் பிளிப்கார்ட் தளத்தில் உறுதியாகி இருக்கின்றன. பட்ஜெட் மாடலாக கிடைக்க இருக்கும் இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் வருகிற நவம்பர் 24ஆம் தேதி இந்த மோட்டோ ஜி57 பவர் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதியாகி இருப்பதால், அதில் டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் வெளியாகிவிட்டன. இதை முதலில் பார்த்துவிட்டு, விலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நவ.24-க்கு அப்புறம் இதுதான்.. ரூ.13000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி!

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள் (Moto G57 Power Specifications): இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. மேலும், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது.

1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 6s Gen 4) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், ஹை-ரெஸ் ஆடியோ (High-Res Audio) கிடைக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டிஐஏ 600 (Sony LYTIA 600) சென்சார் கிடைக்கிறது.

8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. மொத்தமாக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிஃபைடு மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இந்த டியூரபிலிட்டி மட்டுமல்லாமல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, டிஸ்பிளேவுக்கு ஸ்மார்ட் வாட்டர் டச் (Smart Water Touch) சப்போர்ட் கிடைக்கிறது. மோட்டோ ஏஐ (Moto AI) கிடைக்கிறது. இதில் ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் (AI Photo Enhancement), ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect), பேமிலி ஸ்பேஸ் (Family Space) போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. பான்டோன் க்யூரேட்டட்-வீகன் லெதர் (Pantone Curated-Vegan Leather) டிசைன் கிடைக்கிறது.

இந்த டிசைனில் மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் ரூ.13,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. நவம்பர் 24ஆம் தேதி வெளியாவதற்கு முன்பு தெரியவந்துவிடும்.

இந்த மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. ஆகவே, முழு பீச்சர்கள் ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால், இந்தியாவில் குளோபல் மார்கெட் விலையை விட மலிவாகவே இருக்கும். ஏனென்றால், முந்தைய மாடல்களும் அப்படித்தான் வெளியாகி இருக்கின்றன. பட்ஜெட் பிரியர்களிடையே இது மிகப்பெரிய வரவேற்பை பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G57 Power With 50MP Camera To Launch in India on November 24 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X