Home
Mobile

மோட்டோரோலா அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம், 7000எம்ஏஎச் பேட்டரி, ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி57 பவர் அம்சங்கள்: 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 x 1080பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்டபல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மோட்டோரோலா அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் இருக்கிறது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். குறிப்பாக எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) ராணுவ தரத்திலான குவாலிட்டியும் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார்(Sony LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3-in-1 light sensor என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோ போன்கள்உள்ளிட் பல சிறப்பான வசதிகள் இந்த அசத்தலான மோட்டோ ஜி57 பவர் போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோ ஸ்மார்ட்போன்.

7000mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி67 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

தற்போது மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய போனின் விலை 279 Euros (இந்திய மதிப்பில் ரூ.28,395)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G57 Power launched with 7000mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X