Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 256ஜிபி மெமரி.. ஆண்ட்ராய்டு 15.. புதிய Moto 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் மோட்டோ ஜி56 5ஜி (Moto G56 5G) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது கீக்பெஞ்ச் (Geekbench) தளத்தில் இந்த புதிய மோட்டோ காணப்பட்டது.

எனவே விரைவில் இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் புதிய மோட்டோ போன் ஆனது பட்ஜெட் விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான மோட்டோ ஜி56 5ஜி போனின் சில அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது..புதிய Moto 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

மோட்டோ ஜி56 5ஜி அம்சங்கள் (Moto G56 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (Dimensity 7025) சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் உடன் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு பிளாக், ப்ளூ, லைட் கிரீன் நிறங்களில் இந்த போன் வெளிவரும். தற்போது மோட்டோ ஜி56 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏப்ரல் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள்(Motorola Edge 60 Fusion Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

டால்பி அட்மாஸ்-டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஒஎல்இடி (quad-curved pOLED Display) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2712×1220 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4500 nits peak brightness), 10-பிட் கலர்ஸ் உள்ள உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

50எம்பி சோனி எல்ஒய்டி-700சி (50MP Sony LYT-700C) பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன் விற்பனைக்கு வரும். 5500mAh பேட்டரி வசதி வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G56 5G Spotted on Geekbench: May Launch Soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X