அடுத்த மோட்டோ 5ஜி போன் ரெடி.. சோனி கேமரா.. 5200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி56 5ஜி (moto g56 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி56 5ஜி போன். மேலும் இந்த போனில் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் உள்ளது. பான்டோன் டில் (Pantone Dill), டாஸ்லிங் ப்ளூ (Dazzling Blue) மற்றும் பிளாக் நிறங்களில் இந்த புதிய மோட்டோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி56 5ஜி அம்சங்கள் (moto g56 5G Specifications): ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் உடன் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த மோட்டோ போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி சோனி எலஓய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + டெப்த் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் மோட்டோ ஜி56 5ஜி போனில் உள்ளன. 5200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய மோட்டோ போன்.
photo credit: nieuwemobiel, gizmochina


Click it and Unblock the Notifications








