Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. புது Moto 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி56 5ஜி (Moto G56 5G) ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. சோனி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோ ஜி56 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ ஜி56 5ஜி அம்சங்கள் (Moto G56 5G specifications) : 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2400 x 1080 பிக்சல்ஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மிரண்டுபோன மார்க்கெட்.. புது Moto 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் உடன் மோட்டோ ஜி56 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. இது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி மோட்டோ ஜி56 5ஜி போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த மோட்டோ போனில் உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atoms) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

5200mAh பேட்டரி வசதியுடன் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 200 கிராம் ஆகும்.

ஆனால் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். அதேபோல் பான்டோன் கிரே மிஸ்ட் (PANTONE Gray Mist), பான்டோன் டாஸ்லிங் ப்ளூ (PANTONE Dazzling Blue), பான்டோன் டில் (Pantone Dill) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி56 5ஜி போனின் விலை 250 Euros (இந்திய மதிப்பில் ரூ.24,250).

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G56 5G launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X