அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 33W சார்ஜிங்.. வருகிறது புது Moto போன்.. எந்த மாடல்?
புதிய மோட்டோ ஜி56 5ஜி (moto g56 5G) ஸ்மார்ட்போன் வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று ஆன்லைனில் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் செக் (Czech) மற்றும் ஸ்லோவாக் (Slovak) அதிகாரப்பூர்வ மோட்டோரோலா வலைத்தளங்களில் மோட்டோ ஜி56 5ஜி காணப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கூட அந்த தளங்களில் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த போன் முதலில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோ ஜி56 5ஜி அம்சங்கள் (moto g56 5G Specifications): இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த மோட்டோ போனில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (MediaTek Dimensity 7060 6nm)சிப்செட் உடன் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி சோனி எலஓய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + டெப்த் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
குறிப்பாக யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் மோட்டோ ஜி56 5ஜி போனில் உள்ளன. 5200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
பான்டோன் டில் (Pantone Dill), டாஸ்லிங் ப்ளூ (Dazzling Blue) மற்றும் பிளாக் நிறங்களில் இந்த புதிய மோட்டோ போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோ போன்.
அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய மோட்டோ போன்.
Photo Credit: NieuweMobiel


Click it and Unblock the Notifications








