கொஞ்சம் கேப் விடுங்க மோட்டோரோலா.. IP69 ரேட்டிங்.. சோனி கேமரா.. வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?
கடந்த சில மாதங்களில் தொடர்ந்து அதிகமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது மோட்டோரோலா (Motorola). அதாவது மற்ற நிறுவனங்களை விட மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி56 5ஜி (moto g56 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஐபி69 ரேட்டிங், சோனி கேமரா, டால்பி அட்மாஸ் ஆடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ ஜி56 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ ஜி56 5ஜி அம்சங்கள் (moto g56 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த மோட்டோ போனில் உள்ளன.
அதேபோல் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் உடன் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறம் 50எம்பி சோனி எலஓய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் மோட்டோ ஜி56 5ஜி போனில் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
5200mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் பிளாக், பாட்டோன் கிரே மிஸ்ட்,பான்டோன் டாஸ்லிங் ப்ளூ மற்றும் பான்டோன் டில் (Pantone Dill) உள்ளிட்ட நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி56 5ஜி போனின் விலை ரூ.23,880-ஆக உள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








