மொரட்டு பட்ஜெட்.. ரூ.23,134 போதும்.. OIS கேமரா.. QUAD கேமரா.. 30W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மோட்டோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படியான கம்மி பட்ஜெட்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50எம்பி கேமரா, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி போன்ற பக்கா பீச்சர்களுடன் மோட்டோ ஜி55 5ஜி (Moto G55 5G) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
மோட்டோ ஜி55 5ஜி அம்சங்கள் (Moto G55 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.5 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிஸ்பிளே கலர் பூஸ்ட் (Display Color Boost) சப்போர்ட் வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) வருகிறது. மோட்டோ போன்களில் வழக்கமாக கிடைக்கும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. ஆகவே, வீடியோ மற்றும் ஆடியோ குவாலிட்டி மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும்.
30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த மோட்டோ ஜி55 5ஜி போனில் குவாட் பிக்சல் (Quad Pixel) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) மாடலாகும்.
இருப்பினும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ விஷன் லென்ஸ் (Macro Vision Lens) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) வருகிறது. ஆகவே, கேமராவில் மிட்-பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

அதேபோல செல்பீ கேமராவில் பேஸ் ரீடச் மோட் (Face Retouch Mode) வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி, 256 மெமரி கொண்ட மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுப்பதற்காக ரேம் பூஸ்ட் (RAM Boost) டெக்னாலஜி வருகிறது.
இந்த மோட்டோ ஜி55 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மிட்-ரேஞ்ச் கேமிங் அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (MediaTek Dimensity 7025) சிப்செட் வருகிறது. ஹலே யுஐ (Hello UI) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) உள்ளது.
சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) மற்றும் IP52 ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,134ஆக இருக்கிறது. இப்போது குளோபல் வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் குளோபல் மாடலின் விலை விட மலிவான விலைக்கு வெளியாகலாம்.. இந்த மோட்டோ போனில் ஃபாரஸ்ட் கிரே (Forest Grey), ஸ்மோக்கி கிரீன் (Smoky Green) மற்றும் ட்விலைட் பர்பிள் (Twilight Purple) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் ஃபரஸ்ட் கிரே மாடலை தவி மற்ற 2 மாடல்களும் வேகன் லெதர் பேக் பேனல் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








