கொஞ்சம் கேப் விடுங்க Motorola.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?
சமீபத்தில் தான் இந்தியாவில் மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) ஸ்மார்ட்போனை ரூ.9999 விலையில் அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி35 5ஜி, மோட்டோரோலா ரேஸ்ர் 50 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். இதுதவிர மோட்டோ ஜி55 5ஜி (Moto G55 5G) எனும் போனையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்..
அதாவது மோட்டோரோலா (Motorola) நிறுவனம் வரும் மாதங்களில் மோட்டோ ஜி55 5ஜி அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் இந்த மோட்டோ ஜி55 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மோட்டோ ஜி55 5ஜி அம்சங்கள் (Moto G55 5G Specifications): ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
மீடியாடெக் டைமன்சிட்டி 5ஜி சிப்செட் உடன் இந்த மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது.
5000mAh பேட்டரியுடன் மோட்டோ ஜி55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய மோட்டோ போன் வெளிவரும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி55 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
மோட்டோ ஜி55 5ஜி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ரூ.12,000-க்கு கீழ் மோட்டோ ஜி55 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: 91mobiles, phonearena.com


Click it and Unblock the Notifications








