Home
Mobile

தேதி குறிச்சிட்டாங்க.. 50MP கேமரா.. 6.5-இன்ச் டிஸ்பிளே.. அந்த Moto போன் களமிறங்க போவது உறுதி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்டபோனை வரும் செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வெய்போ (Weibo) தளத்தில் இந்த மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G ) போனின் அறிமுகம் குறித்தும், இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக மோட்டோ ஜி54 5ஜி கம்மி விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தேதி குறிச்சிட்டாங்க.. அந்த Moto போன் களமிறங்க போவது உறுதி..

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் இந்த மோட்டோ ஜி54 5ஜி போன். மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி குவாட் பிக்சல் (Quad Pixel)பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவரும் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

பவர் பட்டன் (power button) மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் (volume rockers) இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டால்பி அட்மோஸ்(Dolby Atmos)மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேதி குறிச்சிட்டாங்க.. அந்த Moto போன் களமிறங்க போவது உறுதி..

குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13)இயங்குதளம் இந்த போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்ப்ரோசியா (Ambrosia), பாலட் ப்ளூ (Ballad Blue), கரோனெட் ப்ளூ (Coronet Blue) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி54 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G54 5G will be launched on September 5: check specifications, price and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X