Home
Mobile

விடவே கூடாத Motorola போன்.. டால்பி அட்மோஸ், 8ஜிபி ரேம், 50எம்பி ரியர் கேமரா.. என்ன மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி54 5ஜி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போன் எப்சிசி (FCC) இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

டர்போ பவர் சார்ஜிங், டால்பி அட்மோஸ், பெரிய டிஸ்பிளே, சக்திவாய்ந்த சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விடவே கூடாத Motorola போன்.. 8ஜிபி ரேம், டால்பி அட்மோஸ்..என்ன மாடல்?

மோட்டோ ஜி54 5ஜி அம்சங்கள் (Moto G54 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி குவாட் பிக்சல் (Quad Pixel) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த போனில். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.

பவர் பட்டன் (power button) மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் (volume rockers) இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அம்ப்ரோசியா(Ambrosia), பாலட் ப்ளூ (Ballad Blue), கரோனெட் ப்ளூ (Coronet Blue) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விடவே கூடாத Motorola போன்.. 8ஜிபி ரேம், டால்பி அட்மோஸ்..என்ன மாடல்?

விரைவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 5640எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் மோட்டோ ஜி54 5ஜி போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G54 5G phone spotted on FCC site: check specifications And More details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X