தூக்கி பாக்கெட்டுல போடலாம்.. 50MP கேமரா.. 6.5-இன்ச் டிஸ்பிளே உடன் புது மோட்டோ 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் கம்மி விலையில் ரெட்மி 12 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ரெட்மி போனுக்கு போட்டியாக மோட்டோரோலா நிறுவனமும் கம்மி விலையில் ஒரு அசத்தலான மோட்டோ 5ஜி ஸமார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி54 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் தற்போது பிஐஎஸ் (BIS) இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் XT-2343-1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் டூயல் ரியர் கேமரா, மற்றும் பெரிய
டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் பவர் பட்டன் (power button) மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் (volume rockers) இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளது.
மோட்டோ ஜி54 5ஜி அம்சங்கள் (Moto G54 5G specifications): 50எம்பி குவாட் பிக்சல் (Quad Pixel)பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு அறிமுகமாகும் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.. மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
அதேபோல் டால்பி அட்மோஸ்(Dolby Atmos)மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13)இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 5640எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
இதுதவிர கைரேகை ஸ்கேனர், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்பது குறிப்பிடத்தக்கது.
அம்ப்ரோசியா(Ambrosia), பாலட் ப்ளூ (Ballad Blue), கரோனெட் ப்ளூ (Coronet Blue) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) நிறங்களில் இந்த புதிய மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அதேபோல் இந்தியாவில் மோட்டோ ஜி54 5ஜி போன் ஆனது ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








