திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் Moto 5G போன்.. முழுசா ரூ.3000 விலை குறைப்பை பெற்ற 6000mAh பேட்டரி மாடல்!
6000எம்ஏஎச் பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், ஐபி52 ரேட்டிங் உட்பட பல முக்கிய அம்சங்களுடன் வரும் மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போனின் மீது திடீரென ரூ.3000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G) ஸ்மார்ட்போன் தான். நினைவூட்டும் வண்ணம் மோட்டோ ஜி54 5ஜி மாடல் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பழைய விலை VS புதிய விலை: இந்தியாவில் அறிமுகமான போது மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் அபிஷனின் விலை (அதாவது ஆரம்ப விலை) ரூ.15,999 ஆக இருந்தது. தற்போது மோட்டோரோலா நிறுவனம் இந்த மோட்டோ ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை ரூ.3000 குறைத்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் அறிமுகமானது.

தற்போது ரூ.3000 விலைக் குறைப்பிற்கு பின்னர் மோட்டோரோலாவின் ஆன்லைன் ஸ்டோர் (Motorola online store) மற்றும் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart ) வழியாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.13,999 க்கும் மற்றும் ரூ.15,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
மோட்டோ ஜி54 5ஜி விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் மோட்டார் ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மை யுஐ 5.0 உடன் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 14-க்கான அப்டேட்டை பெறும் என்றும், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்றும் மோட்டோரோலா உறுதியளித்துள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் உடன் வருகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் குவாட் பிக்சல் (Quad Pixel) தொழில்நுட்பம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பெய்டு, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது ஐபி52-ரேட்டிங் வாட்டர் ரெப்பல்லென்ட் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.
கடைசியாக மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 33W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 66 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 90 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும்.


Click it and Unblock the Notifications








