Home
Mobile

அடிதூள்.. கம்மி விலை 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய மோட்டோரோலா.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் உள்ள மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை தெரிவித்துள்ளது. அதாவது தற்போது மோட்டோ ஜி54 5ஜி போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 பீட்டா அப்டேட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும்.

டீப்பர் மெட்டீரியல் யூ தீமிங் (Deeper Material You theming), கஸ்டம் லாக் ஸ்கிரீன் ஷார்ட்கட்ஸ் (Custom lock screen shortcuts) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை இந்த புதிய அப்டேட் வழங்குகிறது. குறிப்பாக மோட்டோ ஜி54 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 பீட்டா அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இப்போது மோட்டோ ஜி54 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கம்மி விலை 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய மோட்டோரோலா..

மோட்டோ ஜி54 5ஜி அம்சங்கள் (Moto G54 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மேலும்1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் (dynamic refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

கம்மி விலை 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய மோட்டோரோலா..

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும்.

மிட்நைட் ப்ளூ (Midnight Blue), மிண்ட் க்ரீன் (Mint Green) மற்றும் பியர் ப்ளூ (Pear Blue) நிறங்களில் இந்த மோட்டோ ஜி54 5ஜி போன் வாங்கக் கிடைக்கும். இந்த மோட்டோ ஜி54 5ஜி போனை ரூ.12,999-விலையில் வாங்கலாம். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்தியாவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G54 5G getting Android 14 beta update in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X