Home
Mobile

ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது மோட்டோ போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் அசத்தலான 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி மோட்டோ ஜி54 5ஜி எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த மோட்டோ ஜி54 5ஜி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இதன் முழு விவரக்குறிப்புகளும் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் முழு முழு விவரக்குறிப்புகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. வருகிறது மோட்டோ போன்.. எந்த மாடல்?

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் இந்த மோட்டோ ஜி54 5ஜி போன். மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி குவாட் பிக்சல் (Quad Pixel) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

பவர் பட்டன் (power button) மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் (volume rockers) இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டால்பி அட்மோஸ்(Dolby Atmos)மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவரும் மோட்டோ ஜி54 5ஜி.

அம்ப்ரோசியா (Ambrosia), பாலட் ப்ளூ (Ballad Blue), கரோனெட் ப்ளூ (Coronet Blue) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) நிறங்களில் இந்த மோட்டோ ஜி54 5ஜி போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனின் எடை 196 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.15,000பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G54 5G full specs leaked online: September 5 launch: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X