Home
Mobile

மோட்டோரோலா அதிரடி: மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன் வருகிறது: முழு விவரம்.!

மோட்டோரோலா நிறுவனம் வரும் மார்ச் 29-ம் தேதி புதிய மோட்டோ ஜி13 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி53எஸ் 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் மோட்டோரோலா நிறுவனமும் தொடர்ந்து அதிகமாக 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீண்டும் ஒரு அசத்தலான  மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் வருகிறது.!

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, புதிய மோட்டோ ஜி53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோ ஜி53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மோட்டோ ஜி53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் மோட்டோ ஜி53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080 X 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மீண்டும் ஒரு அசத்தலான  மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் வருகிறது.!

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 930 சிப்செட் உடன் IMG BXM-8-256 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்.

மீண்டும் ஒரு அசத்தலான  மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் வருகிறது.!

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G53s 5G phone with Snapdragon 480 chipset to launch soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X