ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்கள்: எதை வாங்குவது நல்லது.!
தற்போது பல செல்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன. குறிப்பாக சமீபத்தில் மோட்டோரோலா நிறுவன மோட்டோ ஜி53 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதேபோல் இந்திய நிறுவனமான லாவா கடந்த மாதம் Lava Blaze 5G எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
குறிப்பாக இந்த இரண்டு போன்களும் கம்மி விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் 5ஜி ஆதரவுடன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். முதலில் மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி53 5ஜி அம்சங்கள்
மோட்டோ ஜி53 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த முடியும்.
4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோனில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக பிளாக் மற்றும் கிரே நிறத்தில் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 183 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன். மேலும் இப்போது Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாக் பார்ப்போம்.

Lava Blaze 5G ஸ்மார்ட்போன்
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகமானது இந்த லாவா ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ்அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 5ஜி, புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன்.
எந்த ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது?
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.10,690-ஆக உள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

அதேபோல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் விலை 9,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் அருமையாகவே உள்ளது. அதேபோல் இரண்டு போன்களும் 50எம்பி கேமரா ஆதரவு, பெரிய டிஸ்பிளே, 5ஜி ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது. ஆனால லாவா போன் மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேசமயம் மோட்டோ ஸ்மார்ட்போன ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது.
மீடியாடெக் சிப்செட் வசதியை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மற்றபடி இரண்டு போன்களும் அட்டகாசமான அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி ஆதரவுடன் ஒரு நல்ல போனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் மோட்டோ போனை தேர்வுசெய்வது நல்லது.


Click it and Unblock the Notifications