Home
Mobile

இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.16,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் உள்ளிட்ட சில தளங்களில் விற்பனைக்கு வரும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம்,20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக மோட்டோ ஜி52

குறிப்பாக மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக டூயல் கேப்சர், ஸ்மார்ட் கம்போசிஷன், ஸ்பாட் கலர், லைவ் மோட்டோ, ப்ரோ மோஷன் மற்றும் அல்ட்ரா-வைட் டிஸ்டோர்ஷன் கரெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி52

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவு உள்ளது. பின்புஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 5000

புதிய மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33 வாட்டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0,

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, எப்எம் ரேடியோ,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக்
உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 169 கிராம்.

Best Mobiles in India

English summary
Moto G52 With 90Hz pOLED Display, Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X