Home
Mobile

பிளிப்கார்ட்டில் விற்பனை- இடைநிலை சாதனங்களுக்கு சரியான போட்டி: பக்கா அம்சத்தோடு வருகிறது மோட்டோ ஜி52!

மோட்டோரோலா நிறுவனம் ஐரோப்பாவில் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, டால்பி அட்மாஸ் ஆதரவோடு கூடிய இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் 50 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று கேமரா அமைப்பு என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. இந்த மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 37.9 மணிநேர பேக்அப் வசதியை வழங்குகிறது.

சமீபத்திய ஜீ-சீரிஸ் ஸ்மார்ட்போன்

சமீபத்திய ஜீ-சீரிஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா தனது சமீபத்திய ஜீ-சீரிஸ் ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி52 சாதனத்தை ஏப்ரல் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் ஐரோப்பிய சந்தையில் சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மாறுபாடு உலகளாவிய மாடலை போன்றே விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும். மேலும் வரவிருக்கும் மோட்டோ ஜி52 சாதனத்தின் இந்திய விலை சமீபத்தில் ஆன்லைனில் டிப் செய்யப்பட்டது. தற்போது சாதனத்தின் நேரடி வீடியோ அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹேண்ட் ஆன் வீடியோவில் பகிரப்பட்ட தகவல்

ஹேண்ட் ஆன் வீடியோவில் பகிரப்பட்ட தகவல்

மோட்டோ ஜி52 ஹேண்ட் ஆன் வீடியோவில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிப்ஸ்டர் முகுல் ஷர்மா பகிர்ந்திருக்கிறார். இதில் ஸ்மார்ட்போன் பீங்கான் வைட் வண்ண விருப்பத்தில் காணப்படுகிறது. அதேபோல் மோட்டோ ஜி52 சாதனம் அதன் சர்வதேச மாறுபாட்டைப் போன்றே சார்கோல் க்ரே மற்றும் க்ளேசியர் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மோட்டோ ஜி52 சாதனத்தின் ஹேண்ட் ஆன் வீடியோ வடிவமைப்பை அதன் முழு வீடியோவில் காட்டுகிறது. இதன் பின்புறம் பளபளப்பான பூச்சு மற்றும் டிரிபிள் சென்சார்களை டேப்லெட் வடிவ கேமரா தொகுதியுடன் வருகிறது.

பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி

பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி

மோட்டோரோலா லோகோ பின்புற பேனலின் நடுவில் காணப்படுகிறது. முன்பக்கத்தில் ஸ்மார்ட்போனின் நடுவில் கேமரா பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு இருக்கும். மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் மெலிதான சாதனமாக இருக்கும் என டிப்ஸ்டர் தகவல் கூறுகிறது. இதன் எடை 169 கிராம் உடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி52 அம்சங்கள்

இந்தியாவில் மோட்டோ ஜி52 அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் பிஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வரும். ஹூட்டின் கீழ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது.

16 எம்பி முன்புற கேமரா வசதி

16 எம்பி முன்புற கேமரா வசதி

மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் செல்பி ஆதரவுக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டால்பி அட்மாஸ் உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐபி52 மதிப்பீடு, ஹெட்ஃபோன் ஜாக் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனவர் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மோட்டோ ஜி52 எதிர்பார்க்கப்படும் விலை

இந்தியாவில் மோட்டோ ஜி52 எதிர்பார்க்கப்படும் விலை

முந்தைய தகவலின்படி, மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது ரூ.19,999 என இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரூ.17,999 என்ற விலை வரம்பில் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இடை நிலை ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த சாதனம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் நாட்டில் பிளிப்கார்ட் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போனில் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த சாதனத்தை சார்ஜ் செய்தால் 37.9 மணிநேர வரையிலான ப்ளேபேக் நேரத்தை வழங்குகிறது. இந்த சாதனத்தில் ஐபி52 ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் சாதனத்தை தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Moto G52 Design tipped Online: Confirmed to be Available in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X