ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் மோட்டோ ஜி51.!
சமீபத்தில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன்
வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி51
மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 720 x 1600 பிக்சல்தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16 எம்பிசெல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும்புகைப்படங்களை எடுக்க முடியும்.

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி51 ஸ்மார்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் 5.2, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம்செய்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி50 5ஜி
இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுஇந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது . அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக மோட்டோ ஜி50 5ஜி சாதனத்தின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி50 5ஜி.

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உள்ளிட்ட அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, வைஃபை ஏசி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 5 ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி50 5ஜி.


Click it and Unblock the Notifications