Home
Mobile

டிசம்பர் 10: இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி டிசம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சாதனம் இந்தியாவில் அறிகமுகம் செய்யப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பிசெல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மா

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் இந்த சாதனத்திற்கு
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 5000 எம்ஏஎச்

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி51

மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு, புளூடூத் 5.2, வைஃபை 6, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் டீசர் ட்விட்டர் தளத்தில் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moto G51 5G with 50 Mega Pixel Camera Launching in India on December 10: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X