அதுதான் இது., இதுதான் அது- அம்சங்கள் மட்டும் வேறலெவல்: மோட்டோ ஜி51 5ஜி இப்படியும் இருக்கலாம்!

|

மோட்டோ ஜி51 5ஜி விவரக்குறிப்புகள் கீக்பெஞ்ச் லிஸ்ட் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி வதசியோடு வரும் என கூறப்படுகிறது. மோட்டோ ஜி51 5ஜி சாதனம் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோரோலா மோட்டோ ஜி51 5ஜி-ன் வெளியீடு விரைவில் நடக்கும் என கூறப்படுகிறது. கீக்பெஞ்ச் தளத்தில் தற்போது இந்த சாதனம் காணப்படுகிறது. சாதனத்தின் சில முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இதில் வெளியிட்ட பட்டியலின்படி, மோட்டோ ஜி51 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் உடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் இயங்கும் எனவும் பட்டியலிடப்படுகிறது. மோட்டோ ஜி51 5ஜி இந்தாண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி50 5ஜி வாரிசாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி

கீக்பெஞ்ச் பட்டியலின்படி ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் சோதனைகளில் 541 முதல் 545 புள்ளிகள் மற்றும் மல்டி கோர் சோதனைகள் உடன் 1602 மற்றும் 1675 புள்ளிகள் வரை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியல்கள் வரவிருக்கும் மோட்டோ ஜி51 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஓசி மூலம் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11-ல் ஆஃப்-தி-பாக்ஸில் இயங்கும் என கீக்பெஞ்ச் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி51 5ஜி அறிமுகம் இன்னும் மோட்டோரோலாவால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி50 5ஜி வாரிசாக இருக்கும் என தகவல்

மோட்டோ ஜி50 5ஜி வாரிசாக இருக்கும் என தகவல்

மோட்டோ ஜி51 5ஜி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி50 5ஜி வாரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ ஜி51 5ஜி சிறப்பம்சங்கள் மோட்டோ ஜி50 5ஜி-க்கு மேம்படுத்தப்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 269 பிபிஐ பிக்சல் அடர்த்தி உடன் வருகிறது. 85 சதவீதம் டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்துடன் வருகிறது. மேலும் இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மோட்டோ ஜி50 5ஜி மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்காக 13 மெகாபிக்சல் சென்சார் இருக்கிறது. அதோடு இந்த சாதனம் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. பாதுகாப்பு வசதிக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டுள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

அதேபோல் அக்டோபர் 12 (இன்று) மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விலைப் பிரிவுகளில் சாதனம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.9499 என்ற விலையில் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G51 5G may Launching with 4GB RAM, Android 11 and More: Listed by Geekbench

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X