மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!

|

மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்கள் கொண்டிருக்கும் எனவும் 48 எம்பி பிரதான கேமரா கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டீனா பட்டியலில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்களின்படி, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா உட்பட மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் உச்சநிலை வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் மற்றும் ஓஎஸ் குறித்த தகவல்கள் டீனா பட்டியலில் தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஜி50 சாதனமானது ஜி100 ஸ்மார்ட்போனுடன் வரும் என கூறப்படுகிறது.

மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!

மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் இருக்கும் என கூறப்படுகிறது. டீல்டெக் அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போன் கேமரா தொகுதி 48எம்பி குவாட் பிக்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கேமரா அமைப்பில் எல்இடி பிளாஷ் வசதியும் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தின் மோட்டோ லோகோவுக்குள் உடல் கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் செல்பி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாட்ச் வசதி இருக்கிறது. இந்த சாதனம் ப்ளூ மற்றும் ஆஷ் வண்ண விருப்பங்களில் வரும் என கசிந்த தகவல் கூறுகிறது.

மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!

ஸ்மார்ட்போனானது மாடல் எண் XT2137 உடன் மோட்டோ ஜி50 ஸ்பானிஷ் சில்லறை விற்பனையாளரின் இணையதளத்தில் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஐரோப்பிய மாடல் குறித்த தகவலின்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு கூடிய வசதியின் இந்திய மதிப்பு ரூ.19,700 ஆக இருக்கிறது என பட்டியலில் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இருக்கும் என கீக்பெஞ்ச் பட்டியலில் தெளிவாக காணப்படுகிறது. இருப்பினும் ஸ்மார்ட்போனின் பிற விவரங்கள் தற்போதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!

ஸ்மார்ட்போன் டீனா சான்றிதழில் மாடல் எண் உடன் காணப்பட்டுள்ளது. டீனாவில் காணப்படும் மாடல் எண் ஆனது XT2137-2 ஆகும். இது மோட்டோ ஜி50 மாடலின் மற்றொரு மாறுபாடாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த பட்டியலின்படி இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் எனவும் இது 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவின் மூலம் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோ ஜி50 இப்படிதான் இருக்குமா?- வெளியான தகவலே அட்டகாசம்!

அதேபோல் மாடல் எண் XT2137-2 உடன் மோட்டோ ஜி50 கீக்பெஞ்ச் ஜப்பான் சான்றிதழ் தரவுளத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி மூலம் இயங்கும் எனவும் 6ஜிபி ரேம் கொண்ட சாதனமாக இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த தகவலின்படி இது 4850 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto G50 Specification Leaked: Smartphone May Launching with Triple Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X