மலிவுவிலை 5ஜி சாதனம்: மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் 90ஹெட்ஸ் புதுப்பிப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம்!
மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள், விலை குறித்து பார்க்கலாம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி அம்சத்தோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே அம்சம் இருக்கிறது.

மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனை மோட்டோ ஜி100 உடன் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்திருக்கிறது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது 5ஜி அம்சத்தை கொண்டிருக்கிறது. இது நிறுவனத்தின் மலிவு விலை 5ஜி சாதனமாகும். மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. மோட்டோ ஜி50 விலை 250 யூரோ ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.21,300 ஆக இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி
ஐரோப்பிய சந்தையில் மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது இருக்கிறது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுவதாகும். இந்த ஸ்மார்ட்போன் அக்வா கிரீன் மற்றும் ஸ்டீல் க்ரே ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

மோட்டோ ஜி50 விலை விவரங்கள்
90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம், 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் இது வருகிறது. இது நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் பாலிகார்பனேட் பின்புற பேனலைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து விவரமாக பார்க்கலாம். மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை யூரோ 250 ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.21,300 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பிற பிராந்தியங்களில் வரி வேறுபாட்டின் காரணமாக யூரோ 229 ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.19,500 ஆக இருக்கிறது. இருப்பினும் அதன் விலை விவரங்கள் சரியாக தெரியவில்லை. அதேபோல் இந்தியாவில் மோட்டோ ஜி50 அறிமுகம் குறித்து எந்த விவரங்களையும் மோட்டோரோலா நிறுவனம் வெளியிடவில்லை.

6.5 இன்ச் எச்டி+ ரெசல்யூஷன்
மோட்டோரோலா மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்ஜிடி எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. டிஸ்ப்ளே மேற்புற நடுவில் வி-வடிவ செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது எஸ்ஓசி 8 என்எம் செயல்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பில் வருகிறது. அதேபோல் 128ஜிபி உள்சேமிப்பு விருப்பத்திலும் கிடைக்கும். மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

மோட்டோ ஜி50 கேமரா அம்சங்கள்
மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 48 எம்பி பிரதான கேமரா, 5எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் என மூன்று கேமராக்கள் இருக்கிறது. அதேபோல் இதன் பின்புற கேமரா வடிவமைப்பில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியாது. மேலும் முன்புற கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 13எம்பி செல்பி கேமரா இருக்கிறது. மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்கார்ட் ஸ்லாட்கள் மற்றும் 5ஜி இணைப்பு இருக்கிறது. ப்ளூடூத் வி5.0, வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications