Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஆஸ்திரேலிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனின்
விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.21,500-ஆக உள்ளது. மேலும் Meteorite Grey நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த
புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக மோட்டோ ஜி50 5ஜி சாதனத்தின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உள்ளிட்ட அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, வைஃபை ஏசி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 5 ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Moto G50 5G With 5,000mAh Battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X