இந்திய விற்பனைக்கு ரெடி : மோட்டோ ஜி5 (விலை, அம்சங்கள்).!

Written By:

லெனோவா நிறுவனம் (இன்று) செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அதன் மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முதலில் பிப்ரவரி மாதம் நடைபெட்ரா மொபைல் வேர்ல்டு மாநாட்டில் அறிமுகமான இந்த தொலைபேசியை, பிரத்தியேகமாக அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விற்பனைக்கு ரெடி : மோட்டோ ஜி5 (விலை, அம்சங்கள்).!

விற்பனைக்கு வந்துள்ள மோட்டோ ஜி5 கருவியின் விலை நிர்ணயம் என்ன.? அதன் எந்த மாறுபாடு இப்போதைக்கு இந்தியாவில் கிடைக்கும்.? மேலும் கருவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரேம்

ரேம்

விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி5 கருவியின் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 3ஜிபி ரேம் கொண்டுள்ள இக்கருவி மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியோடு கணிசமாக வேறுபட்டுள்ளது.

மெட்டல் வடிவமைப்பு

மெட்டல் வடிவமைப்பு

ஜி5 ப்ளஸ் கருவியை போல அதிக அளவிலான பிளாஸ்டிக் உடல் கொண்டிருக்காமல் மெட்டல் வடிவமைப்பை இக்கருவி கொண்டுள்ளது மேலும் ஒரு நீக்கக்கூடிய பேட்டரி கொண்டு இந்த ஆண்டு தொடங்கப்பட்ட அரிய போன்களில் ஒன்றாகும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 2800எம்ஏஎச் பேட்டரி கொண்ட இக்கருவி நிலையான 5 அங்குல (1080பி) டிஸ்ப்ளே திரையின் கீழ் ஒரு கைரேகை ஸ்கேனர் மற்றும் ஹோம் பொத்தான் கொண்டுள்ளது. நன்றாக வட்ட முனைகள், நல்ல உருவாக்க தரம் கொண்டுள்ள இக்கருவி 13எம்பி பின்புற கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது உள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

சந்தையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 4 போன்ற போன்களுக்கு எதிராக காலம் காணும் இந்த கருவி ரூ.11,999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

பெரிய சிறப்பம்சமாக இதன் மென்பொருள் திகழ்கிறது. இந்த விலை நிர்ணயத்தில் ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு வரும் கருவியாக இது திகழ்கிறது மற்றும் இது அமேசான் இந்தியா பயன்பாடுகளை ப்ரீஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும் என்பதும் அவைகளை நிறுவல் நீக்கம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Moto G5 with snapdragon 430 processor, Android Nougat launched in India at Rs 11,999. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot