மோட்டோ ஜி5 எப்போது வெளியாகும்.?
மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பிரிட்டனில் விற்பனைக்கு போகலாம் என்று சூசகமாக கூறுகிறது லீக் தகவல்.
இந்த மாதம் பார்சிலோனாவில் நிகழும் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிமுகமாகும் இரண்டு புதிய மோட்டோ கைபேசிகளில் ஒன்றான மோட்டோ ஜி5 கருவியானது. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் முடிந்த மிக விரைவிலேயே விற்பனைக்கு வரும் என்கிறது சமீபத்திய லீக் தகவல். அதாவது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே பிரிட்டனில் விற்பனைக்கு போகலாம் என்று சூசகமாக கூறுகிறது அந்த லீக் தகவல்.
மேலும் இந்த கசிவின் மூலம் அறியப்பட்ட தகவல்கள் என்னென்ன மற்றும் மோட்டோ ஜி 5 மற்றும் ஜி 5 ப்ளஸ் கருவியில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கப் படுகிறது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

தங்கம் மற்றும் சாம்பல்
மேட்டோ ஜி5 கருவியானது தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்ட கருவியாக வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ-காமர்ஸ் இணையதளத்தில்
பிரிட்டனில் உள்ள ஒரு இ-காமர்ஸ் இணையதளத்தில் இந்த புதிய கசிவின் படி மோட்டோ ஜி5 பற்றிய வெளியீட்டை பற்றி கூறியதே தவிர துரதிருஷ்டவசமாக மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி எப்போது கிடைக்குமென்ற எந்த வார்த்தையும் இல்லை.

ஜி5
பூர்வாங்க கசிவுகளின் அடிப்படையில், மோட்டோ ஜி5 ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 2ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே
மற்றொரு லீக்ஸ் அடிப்படையில் இக்கருவி 16ஜிபி மாறுபாடு குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன அதாவது 5 இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உடன் கூடிய ஒரு 2800எம்ஏஎச் பேட்டரி ஆதரவு ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி5 ப்ளஸ்
மறுபுறம் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியானது 403பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 செயலி 4ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு உள்ளடக்க சேமிப்பு உடன் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க
அசாதாரண ஸ்க்ரீன் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்8 - மார்ச் வெளியீடு.!?


Click it and Unblock the Notifications