மோட்டோ ஜி 5 பிளஸ் (மிட்நைட் ப்ளூ வேரியண்ட்) லீக்ஸ்.!

|

பிரபல டிப்ஸ்டர் ஆன ரோலண்ட் குவாண்ட்ட் வெளியிட்டுள்ள சமீபத்திய மோட்டோ ஜி 5 பிளஸ் கருவி சார்ந்த தகவலில் அக்கருவி மிட்நைட் ப்ளூ நிறத்தில் மென்மையாக்கப்பட்டு வரும் விடயம் கசிந்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் இதன் பிரத்தியேக வெளியீட்டிற்கு முன்னதாக இந்த கசிவு வெளியாகியுள்ளது.

கசிந்த படங்கள் ஆனது அக்கருவியின் முதன்மையான அம்சங்களை மட்டுமின்றி அனைத்து கோணங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட காட்சிகளையும் வழங்குக்கின்றன. மிட்நைட் ப்ளூ நிறத்தில் மட்டுமின்றி ஜி5 பிளஸ் மேலும் இரண்டு நிறங்களிலும் கிடைக்கின்றது - தங்கம் மற்றும் லுனார் சாம்பல். நிறங்களில் கிடைக்கும். மிட்நைட் ப்ளூ லத்தீன் அமெரிக்க சந்தைக்கான ஒரு பிரத்தியேக வண்ணமாகத் தெரிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை

அதே நேரத்தில் பொதுமக்களுக்கு அதன் துல்லியமான வெளியீட்டு தேதி எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஏற்கனவே இரண்டு நிற வேறுபாடுகள் கிடைக்கின்றன.

நெருக்கமான தோற்றம்

நெருக்கமான தோற்றம்

வெளியான கசிவு தகவலின் கீழ் கருவியின் ஒரு நெருக்கமான தோற்றம் அதன் வடிவமைப்பு அழகியல் ஆகியவைகள் வெளிப்படுகிறது. இது மற்ற இரண்டு வண்ண மாறுபாடுகளுடன் ஒத்ததாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இந்த ஹேண்ட்செட்டின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் கேமரா சென்சார் பின்பக்கம் இருக்க முன்பக்கம் ஹோம் பொத்தானில் கைரேகை சென்சார் உள்ளது. சாதனத்தின் இடது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பொத்தானையும் கவனிக்கலாம்.

கேமரா

கேமரா

ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராசஸர் 2ஜிகாஹெர்ட்ஸ், 3000எம்ஏஎச் பேட்டரி, பின்புறத்தில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ள இக்கருவி 5.2 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ரேம்

ரேம்

இந்த மோட்டோ ஜி5 பிளஸ் மிட்நைட் ப்ளூ கருவியானது இரண்டு கட்டமைப்புகளில் கிடைக்கும்: 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 2 ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்புடன் 4 ஜிபி ரேம்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இந்த ஜி5 பிளஸ் சாதகமானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அதன் டிஸ்ப்ளே சமீபத்திய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

புகைப்படங்கள் : ரோலண்ட் குவாண்ட்ட் (ட்விட்டர்)

Best Mobiles in India

English summary
Moto G5 Plus Midnight Blue variant leaks with 5.2in full HD display, Snapdragon 625 SoC and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X