மோட்டோ ஜி5 ப்ளஸ் : விலை, அம்சங்கள் & வெளியீட்டு தேதி.!
மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியின் டிஸ்ப்ளே, சேமிப்பு, பேட்டரி, விலை பற்றிய தகவல்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்பே வெளியான சமீபத்திய ரெட்டிட் கசிவின் படி மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டிருக்கும் என்பதை அறிவித்துள்ளது. அந்த லீக்ஸ் படம் சாதனத்தின் பெயரை வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட அதில் "மோட்டோ $" என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கருவி நிச்சயமாக மோட்டோ ஜி5 ப்ளஸ் சார்ந்த ஒரு லீக்ஸ் தகவலாகத்தான் இருக்கக்கூடும். சரி அதுவொருபக்கம் இருக்கட்டும், மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியின் டிஸ்ப்ளே, சேமிப்பு, பேட்டரி, விலை பற்றிய தகவல்கள் இதோ.!

மிகவும் எதிர்பார்க்கப்படும்
முன்பு வெளியான லீக்ஸ் தகவலின்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி மோட்டோ சி கருவி போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளதாக அறியப்பட்டது பின்னர் இக்கருவி மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியின் ஒரு வாரிசாக இருக்கலாம் என்பது போல் இருக்கலாம் என்று தகவல்கள் பரிந்துரைத்தனர்.

ஒரு கலவை
லீக் தகவலில் இருந்து இக்கருவியி வெள்ளி கலப்பு நிறத்தில், ஜி4 கருவி போன்ற முன் மோட்டோ டிம்பிள் மற்றும் ஒரு பாடி பட்டதன் கொண்ட, மற்றும் மோட்டோ இசெட் போன்றே ஒரு பெரிய பின்புற பெரிய கேமரா ஆகிய வடிவமைப்பின் ஒரு கலவையாக உள்ளது.

ரேம், டிஸ்ப்ளே
உடன் இக்கருவி ஒரு 2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 625 அக்டாகோர் சிப்செட் மூலம் இயங்கும், 32 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பும் மற்றும் 4ஜிபி வரை ரேம், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, 5.2-அங்குல முழு எச்டி (1080) டிஸ்ப்ளே மற்றும் சாத்தியமான ஒரு கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்று லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கிறது.

கேமரா, சென்சார்
டிஸ்ப்ளேவை வைத்து பார்க்கும் போது மோட்டோ ஜி5 பிளஸ் கருவியில் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லீக்ஸ் தகவலோ இக்கருவி 13-மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று பட்டியலிட்டுள்ளது. உடன் நிக்கருவியில் என்எப்சி (NFC) அக்சலரோமீட்டர் , 3-ஆக்சிஸ் கிரையோஸ்கோப் மற்றும் கிராவிட்டு சென்சார்கள் இருக்கும் என்றும் லீக்ஸ் வெளிப்படுத்துகிறது.

எம்டபுள்யூசி 2017
ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0 ஓஎஸ் ப்ரீ-லோட் உடன் வெளியாகும் என்று எதிர்பார்கப்படும் இக்கருவி பிப்ரவரியில் நடக்கும் எம்டபுள்யூசி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை
வரவிருக்கும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியானது சுமார் ரூ.32,132/- என்ற விலை நிர்ணயத்தை சுற்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் இது உறுதியான தகவல் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
2017-ல் வாங்கக்கூடிய விருப்பத்திற்குரிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்


Click it and Unblock the Notifications