ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் கலக்க வரும் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.!
இந்திய செல்போன் சந்தையில் கலக்கி வரும் நிறுவமான மோட்டோ ரோலோ இருக்கின்றது.
இந்திய செல்போன் சந்தையில் கலக்கி வரும் நிறுவமான மோட்டோ ரோலோ இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கு தனி மவுசும் சந்தையில் இருக்கின்றது. மோட்டோ ரோலா நிறுவனம் பட்ஜெட் விலையிலும் சென்போன்களை விற்பனை செய்து வருது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது மோட்டோ ரோலா நிறுவனம் மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் என்ற இரு மாடல் போன்களில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் விற்பனைக்கு களமிறங்குகின்றது.

கடந்த விற்பனை:
மோட்டோவின் ஜி5 மற்றும் ஜி 5 பிளஸ் ஆகிய இரு மாடல்களும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவைகள் ஆன்ட்ராய்டு 7.0 நவ்காட் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்துடனே விற்பனைக்கு வந்தன.

மெக்ஸிகோவில் அறிமுகம்:
மோட்டோவின் ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகிய இரு மாடல்களையும் தற்போது நவீனப்படுத்தி ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் மெக்ஸிகோ, பிரேசில், இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

சிறப்புகள்:
ஐகான்ஸ், நியு செட்டிங் மெனு, பிக்சர்- இன்- பிக்சர் மோட்ஸ், ஆட்டோபில் ஏபிஐஎஸ், நியு மல்டி டாக்ஸ்சிங் பியூச்சர்ஸ், சிறந்த நோட்டிப்பிகேசன்கள், அதிகரிக்கப்பட்ட டேட்டா சர்வர், நியு பவர் மெனு யுஐ உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.

மோட்டோ நிறுவனம் மகிழ்ச்சி:
மோட்டோ நிறுவனம் தற்போது ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஆகிய இரு மாடல்களையும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்திற்கு மாற்றப்படுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளது.

விற்பனை தேதி அறிமுகம்:
தற்போது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள மோட்டோ ஜி6 பிளஸ் போனை மட்டும் இன்று அறிமுகப்படுத்துகின்றது. மேலும் ஜி5, ஜி5 பிளஸ் ஆகிய இரு ஸ்மார்ட் போன்களை இந்தாண்டுக்குள் அறிகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications