ஆஹா வந்துட்டான்யா Moto.. டால்பி அட்மாஸ்.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் 108எம்பி கேமரா உடன் புதிய மோட்டோ ஜி47 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது மோட்டோ ஜி47 போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ ஜி47 அம்சங்கள் (Moto G47 specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் மோட்டோ ஜி47 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ ஜி47 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1050 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த மோட்டோ ஜி47 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2-இன்-1 ஆம்பியன்ட் லைட் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோ ஜி47 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி47 ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இதில் உள்ளது.
தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது மோட்டோ ஜி47 போன். இதுதவிர MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். Hello UX சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோ ஜி47 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ ஜி47 போன் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W TurboPower ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, என்எப்சி, எப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
பான்டோன் இம்பெனட்ரேபிள் (Pantone Impenetrable), பான்டோன் நாட்டிக்கல் ப்ளூ ( Pantone Nautical Blue) மற்றும் Pantone Fuchsia Red நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் ஆரம்ப விலை EUR 319 (இந்திய மதிப்பில் ரூ.35,000)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications