ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.10999 பட்ஜெட்ல 16GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த போன்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டருக்கு மேல் ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) போன் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ள முடியும். முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு மார்கெட் மற்றும் டிஸ்கவுண்ட் விலையை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G Specifications): இதுவொரு பட்ஜெட் விலை 5ஜி மாடலாக இருந்தாலும், பிரீமியம் வீகன் லெதர் பேனல் கொடுக்கிறது. அதேபோல கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொடுத்து குவாலிட்டியிலும் தட்டித் தூக்கி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைத்தாலும், அப்கிரேட் வருகிறது.

ஆகவே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்கிரேட் பெற்று கொள்ளலாம். மோட்டோரோலா நிறுவனத்தின் மை யுஎக்ஸ் (My UX) மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 6என்எம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Octa Core 6nm Snapdragon 6s Gen 3) சிப்செட் கொடுக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் சொல்லி கொள்ளும்படி இருக்கும்.
இந்த பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே எதிர்பார்க்க முடியாது, இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுத்து அதை மேட்ச் செய்துள்ளது. இதுபோக எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், இதில் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி பெற்று கொள்ளலாம்.
இந்த மோட்டோ ஜி45 5ஜி போனின் கேமராவை பார்க்கையில் பட்ஜெட்டுக்கு ஏற்ப டூயல் ரியர் செட்டப் வருகிறது. ஆகவே, இதில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் 16 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. மோட்டோவில் வழக்கமாக கிடைக்கும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) உள்ளது.
அதேபோல 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் உள்ளது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற சப்போர்ட் வருகிறது. ப்ளூ (Blue), கிரீன் (Green) மற்றும் வைவா மெஜந்தா (Viva Magenta) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இந்த மோட்டோ ஜி45 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக இருந்தது. இந்த விலையில் ரூ.1,000 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதில் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.10,999 பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








