ஃப்ரீடம் சேல் 2025.. அடிமட்ட ரேட்ல Moto 5ஜி போன்.. ரூ.9,999-க்கு 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
2025ஆம் ஆண்டுக்கான பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் (Flipkart Freedom Sale) பல்வேறு மோட்டோரோலோ மாடல்களுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இப்போது, மார்கெட் விலையைவிட கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட்டில் மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) போனுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த மோட்டோவின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த மோட்டோ ஜி45 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஆனால், 8 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.1,000 விலை குறைப்பு கிடைக்கிறது. அதாவது, இந்த போனின் மார்கெட் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இதில் ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு, ரூ.10,999 பட்ஜெட்டில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது. இதில் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.10,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இதில் பேங்க் டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பெற்று கொள்ளலாம். இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் பிரீமியம் லுக் மற்றும் பீல் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வீகன் லெதன் பேனலுடன் பிரில்லியன்ட் ப்ளூ (Brilliant Blue), பிரில்லியன்ட் கிரீன் (Brilliant Green) கலர்களில் கிடைக்கிறது. மேலும், விவா மெஜந்தா (Viva Magenta) கலரிலும் ஆப்ஷன் இருக்கிறது.
மோட்டோ ஜி45 5ஜி அம்சங்கள் (Moto G45 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் (Octa Core Snapdragon 6s Gen 3 6nm) சிப்செட் மற்றும் அதனுடன் பட்ஜெட் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மை யுஎக்ஸ் (My UX) பெற்று கொள்ளலாம். 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி மேக்ரோ கேமரா சப்போர்ட் உள்ளது. மேலும், 16 எம்பி செல்பீ கேமரா மற்றும் பஞ்ச்-ஹோல் நட்ச் கிடைக்கிறது. 1 டிபி மெமரி சிலாட் கிடைக்கிறது.
ஆடியோவில் கூடுதலாக அவுட்புட் எதிர்பார்க்கும்படி டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இதுபோக ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சர்டிபிகேஷன், சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட், 5ஜி மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








